Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குழந்தைகள் தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த வேண்டுமா?

In
Published: 04:33 GMT, Jun 15, 2016 |
0 Comments
1243
icon_com
This post was written by :
boy urine when sleeping

முதல் ஐந்து வயது வரை ஆழ்ந்த தூக்கத்தினால் குழந்தைகள் தூக்கத்திலேயே சிறு நீர் கழிப்பார்கள். இது சாதாரன விடயம்தான். எனினும் பத்து வயதிற்கும் மேலே இருக்கும் குழந்தைகள் சிறு நீர் கழித்தால் அது சற்று கவனிக்கப்பட வேண்டிய விடயம். அவ்வாறிருந்தால் உடனே வைத்தியரை அணுகி அதற்கு உரிய தீர்வினை காண வேண்டும். வளர்ந்த பின் படுக்கையிலேயே சிறுநீர்கழிப்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

மூளைக்கு சரியான முறையில் தகவல் அனுப்பாதிருத்தல், சிறு நீர் பாதையில் தொற்று, மன அழுத்தம், நீண்ட நாட்களாய் இருக்கும் மலச்சிக்கல், என பல காரணங்கள் உண்டு. இதற்காக கவலைப்பட தேவையில்லை.

ஒலிவ் எண்ணெயை சூடேற்றி உங்கள் குழந்தையின் அடிவயிற்றில் தடவுங்கள். இதனை தினமும் செய்யலாம். காலை மாலை என இரு வேளைகளிலும் செய்தால் அவ்வாறு சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

படுக்கையில் சிறு நீர் கழிக்கும் குழந்தைகளுக்கு பட்டை சிறந்த தீர்வை தரும். பட்டையை தினமும் வெறும் வாயில் மெல்லச் சொல்லுங்கள். அல்லது பட்டையைப் பொடி செய்து பாலிலோ அல்லது உணவிலோ கலந்து சாப்பிடச் செய்யலாம். தினமும் பட்டையை எடுத்துக் கொண்டால், உங்கள் குழந்தை தூக்கத்தில் சிறு நீர் கழிப்பதை எளிதில் மறந்துவிடுவார்கள்.

நெல்லிக்காயுடன் சிறிது தேனையும், மிளகுப் பொடியையும் சேர்த்து இரவு தூங்கப்போகும் முன் சாப்பிடச் சொல்லுங்கள் அல்லது தேனில் ஊற வைத்த நெல்லிக்காயையும் அவர்கள் உண்ணலாம். விரைவில் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை மறந்துவிடுவார்கள்.

அதிக குளிர்ச்சியால் உங்கள் குழந்தைகள் சிறுநீர் படுக்கையிலேயே கழிக்க வாய்ப்புகள் உண்டு. வெல்லம் உடலிற்கு சூட்டினை அளிக்கிறது. ஆகவே இதனை உண்ணும்போது, சிறு நீர்பையில் சிறுநீர் கழிக்கச் செய்யும் உந்துதல் ஏற்படாது. வெல்லத்தை சர்க்கரைக்கு பதிலாக பாலில் கலந்து குடிக்கச் செய்யலாம். வெல்லதுடன் எள்ளை கலந்து உண்டாலும் நல்ல தீர்வினை அளிக்கும். வெறுமனே சாப்பிடவும் கொடுக்கலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg