Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உடல் அழகை அதிகரிக்கும் எலுமிச்சை

In
Updated: 09:18 GMT, Jun 15, 2016 | Published: 04:44 GMT, Jun 15, 2016 |
0 Comments
1328
icon_com
This post was written by :
lemon for face beauty

முகச் சருமத்தை பராமரித்தல் மிகவும் முக்கியமானது. எனினும் இந்த விடயத்தில் சிலர் பிழையான முறைகளைப் பின்பற்றி பின்னர் அதன் விளைவுகளை எதிர்கொள்கின்றனர்.

ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறில் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி வந்தால் முகச் சருமம் பளபளப்பாக இருக்கும். எலுமிச்சை பழச்சாறு அல்லது தயிரை முகத்தில் கருமை படர்ந்த இடத்தில் தேய்க்கவும். உலர்ந்த பிறகு கழுவினால் படிப்படியாக கருமை மாறும்.

எலுமிச்சை சாறுடன் வினிகரையும் சேர்த்து உடலில் கறுப்பான இடங்களில் தடவி வந்தால் நிறம் மாற்றம் தெரியும். எலுமிச்சை சாறை உணவில் தினமும் சேர்த்து வந்தால் முகத்திற்கு நல்லது.

எலுமிச்சை சாறு, பன்னீர், கிளிசரின் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து தினமும் இரவு படுக்கச் செல்லும் முன் முகத்தில் தடவி வந்தால் சிறந்த அழகான முக அழகனைப் பெறலாம்.

அதேபோன்று, எலுமிச்சை சாறு பிழிந்த பிறகு அதன் தோலை தூக்கி எறியாமல், எலுமிச்சை தோலை கை, கால் விரல் நகங்களை நன்கு தேய்த்து விட்டால் நகங்களில் படிந்திருந்த அழுக்குகள் வெளியேறி நகம் பளிச்சென்று மாறும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg