Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகின் சிறந்த உணவகமாக ‘ஒஸ்டெரியா பிரான்செஸ்கானா’ தெரிவு

In வணிகம்
Updated: 08:13 GMT, Jun 15, 2016 | Published: 05:13 GMT, Jun 15, 2016 |
0 Comments
1159
icon_com
This post was written by :

உலகில் மிகவும் சிறந்த உணவகங்களின் பட்டியலில் இத்தாலியில் உள்ள பிரபல உணவகமான ஒஸ்டெரியா பிரான்செஸ்கானா (Osteria Francescana) முதல் இடத்தினை பெற்று தலைசிறந்த உணவகமாக தெரிவாகியுள்ளது.

உலகில் உள்ள தலைசிறந்த உணவகங்கள் தொடர்பிலான செய்திகள் மற்றும் அவற்றின் தரவரிசையில் முதல் 50 இடங்களில் உள்ள உணவகங்கள் என்பவற்றை கடந்த 2002ஆம் ஆண்டில் இருந்து வெளியிட்டு வரும் பத்திரிகையொன்றே, இம்முறை உலகின் சிறந்த உணவகமாக ஒஸ்டெரியா பிரான்செஸ்கானாவை தெரிவு செய்துள்ளது.

இதன் விருது வழங்கும் விழாவின்போது, உலகில் தலைசிறந்த உணவகத்திற்கான விருதினை ஒஸ்டெரியா பிரான்செஸ்கானா உணவகத்தின் தலைமை சமையல் கலைஞர் Massimo Bottura பெற்றுக்கொண்டார்.

உலகில் உள்ள சுமார் ஆயிரம் தலைசிறந்த சமையல் கலைஞர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், சமையல் கலை எழுத்தாளர்கள் போன்றோரை உள்ளடக்கிய தெரிவுக் குழுவினரே இவ்வாறு சிறந்த உணவகங்களை தெரிவு செய்கின்றனர்.

2015 ஆண்டுக்கான தலைசிறந்த உணவகங்களின் தரவரிசையில், ஒஸ்டெரியா பிரான்செஸ்கானா உணவகத்திற்கு அடுத்த படியாக, ஸ்பெயின் நாட்டின் கிரோனா நகரில் உள்ள எல் செல்லெர் டி கேன் ரோக்கா உணவகம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த வருடம் முதல் இடத்துக்கான பரிசை பெற்றிருந்த உணவகமாகும்.

இம்முறை வெளியிடப்பட்டுள்ள தரவரிசையில், அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள இலெவென் மெடிசன் பார்க் உணவகம் மூன்றாம் இடத்திலும், பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் உள்ள சென்ட்ரல் உணவகம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நான்காவது இடத்திலும் உள்ளது. 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg