Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டின் பொருளாதாரம் 5.5 வீதத்தினால் வளர்ச்சி

In வணிகம்
Updated: 11:32 GMT, Jun 16, 2016 | Published: 11:31 GMT, Jun 16, 2016 |
0 Comments
1188
icon_com
This post was written by :
26006cca7a173ab5a28671407914b8e9_XL

இந்த ஆண்டின் முதல் கால் பகுதியில் நாட்டின் பொருளாதாரம் 5.5 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்து சாதகமான வளர்ச்சியைக் காட்டியுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டின் முதல் காலாண்டுப் பகுதிக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி சாராசம்சம் தொடர்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் நேற்று(புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2016 ஆம் ஆண்டுக்கான முதல் மூன்று மாத காலப்பகுதியில் ஈட்டப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் படி நாட்டின் பொருளாதாரம் சுமார் 2.088 ரில்லியனை அடைந்துள்ளது.

கடந்த வருடத்தில் (2015) எட்டப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெறுமதி 1.978 ரில்லியனாகும். எனவே கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 5.5 சதவீத சாதகமான வளர்ச்சியை எட்டியுள்ளது.

பொருளாதாரத்தின் முக்கிய தூண்களாக விளங்கும் விவசாயத்துறை, கைத்தொழில் துறை, சேவைகள் துறை மற்றும் வரி வருமானத்துறை ஆகியன நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியுள்ளன.

அந்த வகையில் விவசாயத்துறை 7.4 வீத பங்களிப்பினையும், கைத்தொழில் துறை 31.6 வீத பங்களிப்பினையும், சேவைகள் துறை 52.4 வீத பங்களிப்பினையும், வரிவருமானத்துறை 8.5 வீத பங்களிப்பினையும் வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டுக்கான முதல் மூன்று மாதங்களில், கைத்தொழில் மற்றும் சேவைகள் துறை அதீத வளர்ச்சியை காட்டியுள்ள அதேவேளை விவசாயத்துறை சாதுவான வளர்ச்சியாக 1.9 வீத வளர்ச்சியையே காட்டி நிற்கிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg