Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எரிபொருளினால் நாட்டிற்கு 5 பில்லியன் ரூபா இலாபம்

In வணிகம்
Published: 11:35 GMT, Jun 16, 2016 |
0 Comments
1074
icon_com
This post was written by :
FRANCE-DEBT-OIL-GAS-TAX-FILES

எரிபொருளினால் இந்த வருடம் நாட்டிற்கு 5 பில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளதாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இப்பொழுது உலக சந்தையில் பெற்றோலின் விலை 51 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

ஆனால் இலங்கையில் நாம் விலையை அதிகரிக்கவில்லை, இதனை மக்களுக்கான சலுகையாக வழங்கியுள்ளோம்.

அத்தோடு மக்களுக்கான சில சலுகைகளை வழங்கும்போது சில இடையூறுகள் ஏற்படுகின்றன. அதனைத் தவிர்த்து நிலையான எதிர்காலத்தை நோக்கி முன்செல்ல வேண்டும்.

மேலும் கனிய எண்ணெய்யின் மூலம் இலாபம் கிடைக்கும் வழிமுறைகளை கையாண்டுள்ளோம். இதன் மூலமும் எதிர்காலத்தில் இலாபம் கிடைக்கும் என நம்புகின்றோம்’ என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg