Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீல் மேக்கர் குழம்பு

In
Published: 11:52 GMT, Jun 16, 2016 |
0 Comments
1124
icon_com
This post was written by :
9a

தேவையான பொருட்கள்:

சோயா உருண்டைகள் – முக்கால் கப்,

வெங்காயம் – 1,

தக்காளி – 3,

இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,

வறுத்துப் பொடியாக்கிய சீரகம் – 2 டீஸ்பூன்,

கொத்தமல்லி,

கறிவேப்பிலை – சிறிதளவு,

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,

கடுகு,

உளுத்தம் பருப்பு – தலா அரை டீஸ்பூன்,

சோம்பு – ஒரு டீஸ்பூன்,

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,

மிளகாய்த்தூள்,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.

சோயாவைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடம் வைத்திருந்து, நன்றாகப் பிழிந்து கொள்ளவும்.

கொதிக்கும் நீரில் தக்காளியைப் போட்டு 2 நிமிடம் வைத்திருந்து எடுத்து, தோலுரித்து ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு போட்டு தாளித்து, வெங்காயத்தைப் போட் டு நன்றாக வதக்கவும்.

இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, அரைத்த தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிந்து வந்ததும், சோயா உருண்டைகளை சேர்த்து வதக்கவும்.

தேவையான அளவு தண்ணீர் (தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம்) விட்டு, வறுத்துப் பொடித்த சீரகத்தைப் போட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg