Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சனி தோஷ பரிகாரத்திற்கு சிறந்த தலம்

In ஆன்மீகம்
Updated: 12:14 GMT, Jun 16, 2016 | Published: 12:14 GMT, Jun 16, 2016 |
0 Comments
1371
This post was written by :

சனி தோஷத்திற்கு சிறந்த பரிகார தலமாக திருநள்ளாறு விளங்குகிறது.

இந்த தலம் சப்த விடங்கத் தலங்களுள் ஒன்றாகப் போற்றப்படுகின்றது. இத்தலத்திற்கு ஆதிபுரி, தர்ப்பராண்யம், நகவிடங்கபுரம், நளேச்சுவரம் என்று வேறு பெயர்களும் உண்டு.

நளனுக்கு நல்வழியைக் கொடுத்ததால் நல் ஆறு, திருநள்ளாறாயிற்று, இறைவன் ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் இத்தலத்தில் சனீஸ்வர பகவானுக்கென தனி ஆலயம் உள்ளது இது வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் உகந்த தலமாகும்.

இத்தலத்தில் அனுக்ரக மூர்த்தியாக விளங்கும் இவருக்கு தனியே அஷ்டோத்ரம், சஹஸ்ரநாம அர்ச்சனைகள் உண்டு. திருமால் பிரம்மன், இந்திரன், திசைபாலகர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனன், நளன் முதலியோர் வழிபட்டு பேறு பெற்ற தலமாகும்.

சந்நிதியின் முன்புறம் மகர, கும்ப ராசிகளின் உருவங்கள் உள்ளன. சனி தோஷமுள்ளவர்கள் எள் முடிச்சு தீபம் போடும் பிரார்த்தனை இங்கு விசேஷம். கோவிலுக்கு சற்று தள்ளியுள்ள நள தீர்த்தத்தில் எண்ணெய் தேய்த்து நீராடுவது நல்லது. இதில் நவகிரகங்களுக்கும் தனித்தனி கிணறுகள் உள்ளன. அதனால் இங்கு நவகிரக சந்நிதி இல்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg