Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வரி செலுத்துவோர் தொடர்பில் புதிய திட்டம்

In வணிகம்
Published: 07:38 GMT, Jun 18, 2016 |
0 Comments
1163
icon_com
This post was written by :
Tax

இலங்கையில் வரி செலுத்த வேண்டிய அனைத்து தரப்பினரையும் பதிவு செய்வதற்கான ஒரு புதிய திட்டத்தினை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தகவலை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சில் நேற்று (வெள்ளிக்கிழமை), இலங்கையின் வணிக சமூகத்தினருடன் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே அவர் குறித்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், வரி ஏய்ப்பு செய்வதை தவிர்ப்பதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாகவே வரி செலுத்த வேண்டிய அனைத்து தரப்பினரும் பதிவு செய்யப்படவுள்ளனர்.

மேலும், சிறிய அளவிலான வணிகத்தை மேற்கொள்பவர்களுக்கு புதிய வரி தொடர்பாக அறிவுரைகள் மற்றும் வற் வரி குறித்த பொருட்கள் தொடர்பான அறிவுரைகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்’ என்றும் அவர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg