Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹொரனையில் புதிய டயர் தொழிற்சாலை : இத்தாலி நிறுவனம் முதலீடு

In வணிகம்
Published: 07:42 GMT, Jun 18, 2016 |
0 Comments
1180
icon_com
This post was written by :
tyress

இத்தாலின் டயர் தயாரிப்பு நிறுவனமொன்று இலங்கையில் முதலீடொன்றை மேற்கொள்ளவுள்ளது. குறித்த முதலீட்டை வைத்து ஹொரனை பிரதேசத்தில் 100 ஏக்கர் காணியொன்றை கொள்வனவு செய்து புதிய டயர் தொழிற்சாலை ஒன்றை நிறுவுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளன.

குறித்த திட்டத்திற்காக இத்தாலி நிறுவனம் 7 கோடியே 50 லட்சம் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக அமைச்சரவையின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

இந்த தொழில்சாலையின் உற்பத்திப் பணிகள் ஆரம்பித்ததும் சுமார் ஆயிரம் பேருக்கு நேரடியான தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கும் என நம்பிக்கை வெளியிடப்படுகின்றது.

மேலும், அத்தொழிற்சாலையின்மூலம் வருடம் ஒன்றிற்கு 30 லட்சம் டயர்களை உற்பத்தி செய்ய முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 75 சதவீதமானவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அதேவேளை, ஏனையவை உள்ளூர் சந்தையில் விற்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg