Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

In
Updated: 08:25 GMT, Jun 18, 2016 | Published: 08:24 GMT, Jun 18, 2016 |
0 Comments
1153
icon_com
This post was written by :
pregnant ladies eating

கர்ப்ப காலம் என்பது பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய காலப்பகுதி. ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க, இக்காலத்தில் பெண்கள் தங்களது உணவுப் பழக்கவழக்கங்களில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். காரணம் கர்ப்பமாக இருக்கும் போது, நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

பெண்கள் உண்ணும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்தாவிட்டால் உணவுப் பொருட்களின் மூலம் கிருமிகளானது உடலினுள் சென்று கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவத்திற்கு வழிவகுக்கும். கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவத்திற்கு வழிவகுக்கும் கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகளை பற்றி பார்க்கலாம்.

கர்ப்பிணிகள் பெடா வகை சீஸ் உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் லிஸ்டெரியா என்னும் பக்டீரியா உள்ளது. இது குறைப்பிரசவம் மற்றும் கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடிய பக்டீரியாவாகும்.

கடல் உணவுகளை கர்ப்பிணிகள் அதிகம் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அதில் பக்டீரியாக்கள் மற்றும் மெர்குரி அதிகம் இருக்கும். எனவே இதனை அதிகம் உட்கொள்ளும் போது, அதனால் நரம்பு மண்டலம் நஞ்சடையக்கூடும். வேண்டுமானால் மாதத்திற்கு ஒருமுறை சுத்தமான நீரில் வளர்க்கப்பட்ட மீனை சமைத்து சாப்பிடலாம்.

கர்ப்பமாக இருக்கும் போது உணவுகளை நன்கு முழுமையாக சமைத்து தான் சாப்பிட வேண்டும். குறிப்பாக முட்டை, இறைச்சி போன்றவற்றை நன்கு சமைத்து தான் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், அதில் உள்ள பக்டீரியாக்கள் கருப்பையில் வளரும் குழந்தையைத் தாக்கி, பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg