Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முகப்பருவை நீக்க இயற்கை வழிகள்

In
Published: 08:32 GMT, Jun 18, 2016 |
0 Comments
1252
icon_com
This post was written by :
Acne

முகப்பரு இக்கால தலைமுறையினருக்கு மிகுந்த மன உளைச்சலை உண்டாக்குகிறது. எனினும் எக்காரணத்தினால் இந்நிலை உண்டாகின்றது என்பது குறித்து அதிகமானவர்கள் அறியாமல் உள்ளனர். உணவு முறை மாறுபாட்டாலும், உடலின் வளர்ச்சிதை மாற்றத்தாலும் முகப்பரு உண்டாகிறது. முகப்பரு தொல்லையால் அவதிப்படுபவர்கள் கீழுள்ள முறைகளை செய்து வந்தால் அதிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.

வெந்தயக் கீரை 1 கைப்பிடி, துளசி இலை சிறிதளவு மற்றும் கொத்துமல்லி இலை சிறிதளவு என்பவற்றை எடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் உள்ள பருக்கள் மீது தடவினால் முகப்பரு மாறும்.

அதேபோன்று, கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய பிறகு அந்த நீரில் முகத்தைக் கழுவி வந்தால் பருக்கள் குறையும்.

மேலும், வெள்ளரி 2 துண்டுகள், தக்காளி 2 துண்டுகள் மற்றும் கரட் 2 துண்டுகள் என்பவற்றை எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறியபின் கழுவினால் பருக்கள் மறையும். எனினும் ஆண்கள் இந்த முறையை செய்யக்கூடாது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg