Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவின் வாகன உற்பத்தி துறையில் வளர்ச்சி

In வணிகம்
Updated: 09:01 GMT, Jun 18, 2016 | Published: 08:57 GMT, Jun 18, 2016 |
0 Comments
1251
icon_com
This post was written by :
vehicle manufacturing in india

இந்தியாவின் வாகன உற்பத்தி துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய உதிரிப்பாக உற்பத்தி என்பன இவ்வருடத்தில் வளர்ச்சி கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக, வாகன உற்பத்தி துறை, அதனுடன் தொடர்புடைய உதிரிப்பாக உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிகள் அதிகரித்துள்ளன. இதனால் அங்கு ஏராளமான இளைஞர் யுவதிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் புதிய வேலை வாய்ப்புக்களையும் பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து இந்திய ஓட்டோமொபைல் உதிரிப்பாக உற்பத்தியாளர் சங்கம் கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த நிதியாண்டில் ஒட்டோமொபைல் துறை பல சவால்களை எதிர்கொண்டது. எனினும் தற்பொழுது ஏற்பட்டுள்ள வளர்ச்சி 8.8 சதவீதமாக இருந்துள்ளது.

எதிர்வரும் மாதங்களில் பருவமழை சாதகமாக இருக்கும் என்பதால், வாகன விற்பனையும் மேலும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த ஆண்டு வளர்சி இரட்டை இலக்கத்தில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்திருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg