Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொடுகு தொல்லையை நீக்க இயற்கை மருத்துவங்கள்

In
Updated: 03:54 GMT, Jun 20, 2016 | Published: 04:37 GMT, Jun 19, 2016 |
0 Comments
1284
icon_com
This post was written by : Shailu
Dandruff hair

பெண்களுக்கு எவ்வாறு முக அழகு முக்கியமோ, கூந்தலும் அதிக அழகை சேர்க்கின்றது. ஆனால் சிலருக்கு அதிகளவில் கூந்தல் உதிரும். கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று பொடுகு.

சிலருக்கு பொடுகு காரணமாக தலையில் அரிப்பு ஏற்படும். இது போன்ற பொடுகு பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்காக சில இயற்கை மருத்துவ குறிப்புகளை பார்க்கலாம்.

* வாரம் ஒரு முறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

* தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்துக் காய்ச்சி தலையில் தேய்த்து வரலாம்.

* தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு மறைந்து விடும்.

* முதல்நாள் சாதம் வடித்த கஞ்சியை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.

* தயிர், முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.

* வால் மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

* வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.

* வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

* வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெய்யில் ஊற வைத்து, அந்த எண்ணெய்யை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும்.

* எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

* தலைக்கு குளிக்கும் போது கடைசியாக குளிக்கும் தண்ணீரில் வினிகர் கலந்து குளித்தால் பொடுகு நீங்கும்.

* நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர பொடுகு நீங்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg