Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியில் இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறுவனம்

In வணிகம்
Updated: 08:59 GMT, Jun 20, 2016 | Published: 05:39 GMT, Jun 19, 2016 |
0 Comments
1083
icon_com
This post was written by : Shailu
SLGTI

கிளிநொச்சியில் நிறுவப்பட்டுள்ள இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறுவனம் எதிர்வரும் ஜுலை மாதம் 18 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறுவனம் கிளிநொச்சியில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதாக கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் திறன் விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஜேர்மன் உயர்ஸ்தானிகர் கலாநிதி. ஜுவெர்ஜென் மொர்ஹார்ட் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

ஜேர்மனியின் பொருளாதார கூட்டாண்மை மற்றும் அபிவிருத்தி அமைச்சின் சார்பாக Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit (GIZ) GmbH  மற்றும் Kreditanstalt für Wiederaufbau (German Development Bank- KfW) ஆகியவற்றினால் முன்னெடுக்கப்படும் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதியில் செயற்படுத்தப்படும் தொழிற்பயிற்சி செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறுவனம் அமைந்துள்ளது.

இந்த செயற்திட்டத்துக்கு இணை நிதி உதவி சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் குடிபெயர்வு செயலாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டிருந்தது.
2012 இல் இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கேள்வி அடிப்படையிலான தொழிற் பயிற்சிகளை மேம்படுத்துவது இதன் நோக்கமாக அமைந்திருந்தது.

அத்தோடு, வாகன தொழில்நுட்பம், நிர்மாண தொழில்நுட்பம், உணவு பதப்படுத்தல் தொழில்நுட்பம், எந்திரவியல் பொறியியல் மற்றும் மின்சார மற்றும் மின் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் உயர் தரம் வாய்ந்த தொழிற் பயிற்சிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்ற நிலையில் , ஆங்கில மொழியில் சகல பயிற்சி செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg