Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ருத்ராட்சத்தின் மகிமை

In ஆன்மீகம்
Updated: 07:35 GMT, Jun 19, 2016 | Published: 07:34 GMT, Jun 19, 2016 |
0 Comments
1194
icon_com
This post was written by : Shailu
rutratsam

ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் அணிந்திருக்கலாம் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.

சிறுவர், சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் படிப்பு திறமை பளிச்சிடும். ருத்ராட்சத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்கலியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றியும், இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும்.

சுத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று கூறப்படுகிறது. ருத்ராட்சம் அணிந்தால் மனம், உடம் தூய்மை அடையும்.
எப்படி மருந்துக்கு பத்தியம் அவசியமோ, அதுபோல ருத்ராட்சம் அணிபவர்களும் மது அருந்துதல், புகைபிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றை படிப்படியாக விட்டுவிட முயற்சிக்க வேண்டும்.

ஐந்து முக ருத்ராட்சங்கள் அணிவதே மிகச் சிறப்பாகும். இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம். ஐந்துமுக ருத்ராட்சத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்சங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.

பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி. நமக்கு வழிகாட்டுவதற்காகதானே அம்பிகையே ருத்ராட்சம் அணிந்து கொள்கிறார். பெண்கள் தாரளமாக அம்பிகை காட்டும் வழியை பின்பற்றி ருத்ராட்சம் அணியலாம்.

சிவபெருமான் கண்களை விழித்து ஆயிரம் ஆண்டுகள் கடும் தவமிருந்த போது, அவர் கண்களில் இருந்து தோன்றியதே ருத்ராட்சம். ருத்ராட்சத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார்.

ருத்ராட்சத்தை அணிந்தபின் எந்த சூழ்நிலையிலு மேகழற்ற வேண்டியதில்லை. நெற்றியில் திருநீறு அணிந்து ஓம்நமசிவாய சொல்லி வந்தாலே போதுமானதாகும். நீராடும் போது ருத்ராட்சம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றது.

கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ருத்ராட்சம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும், நம்வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாக குறைந்து விடும்.

ருத்ராட்சம் அணிபவருக்கு லட்சுமி கடாட்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு பகவானின் பேரின்பமும், ஆனந்தமும் கிடைக்கும் என்று சிவமகாபுராணம் கூறுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg