Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பரிகாரம் செய்பவர்கள் அறிந்திருக்க வேண்டியவை

In ஆன்மீகம்
Published: 13:36 GMT, Jun 20, 2016 |
0 Comments
1528
icon_com
This post was written by :
பரிகாரம்

தற்போது இருக்கும் நடைமுறை வாழ்க்கையில் மக்கள் கோவில்களை தேடி அலைகின்றனர். பல்வேறு விதமான பரிகாரங்களை தகுந்த ஜோதிடர் ஆலோசனைப்படி செய்கின்றனர். தோஷ ரீதியாக எந்த கோவில் செல்ல வேண்டுமோ அந்த கோவிலுக்கு செல்கின்றனர்.

இப்படி செய்யும்போது யாருக்காக தோஷம் கழிக்கிறோம் என்று பார்த்து அவர்களின் நட்சத்திரம் வரும் நாளில் தோஷம் கழிக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். நட்சத்திரம் வரும் நாள் வரை காத்திருக்க முடியாத சூழ்நிலை என்றால் சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் எந்த பரிகாரத்தையும் செய்யலாம்.

ராகு-கேதுக்கு பரிகாரம் செய்வர்கள் 10 நாட்கள் அசைவம் சாப்பிடாமல் விரதமிருந்து காளஹஸ்திக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டும். அப்போது தான் முழு பலனையும் அடைய முடியும்.

பரிகார கோயிலுக்கும் செல்லலாம். பரிகாரம் செய்யும் முன் ஒரு வாரத்திற்கு அசைவம் சாப்பிடாமல் சைவமாக சாப்பிட்டு விரதம் இருப்பது சிறந்தது. பரிகாரம் முடித்தவுடன் அன்று இரவே அசைவ உணவு சேர்க்க கூடாது. அப்படி செய்வதால் நீங்கள் செய்யும் பரிகாரத்திற்கு பலன் இல்லாமல் போய் விடும். சைவ உணவு சாப்பிட்டு விரதம் இருப்பதை பரிகாரம் செய்த நாள் முழுவதும் வரை கடைபிடிக்க வேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg