Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரமழானின் சிறப்பு

In ஆன்மீகம்
Published: 14:18 GMT, Jun 20, 2016 |
0 Comments
1267
icon_com
This post was written by :
A man raises his hands to pray near the sea at sunset after a day of fasting in the holy month of Ramadan in Benghazi

புனித ரமழான் மாதத்தில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை மாத்திரம் எதிர்பார்த்து, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அதேபோன்று ரமழான் மாத இரவுகளில் நின்று தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

மேலும், இம்மாதத்தின் சிறப்பான ‘லைலத்துல் கத்ர்’ இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூ{ஹரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்

‘ரமலான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன’ என்றும் நபி(ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார். (அறிவிப்பாளர்: அபூ{ஹரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1957).

புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதமான ரமழானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற வாய்ப்பளிப்பதோடு ரமழானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg