Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒனியன் சிக்கன் ஃப்ரை

In
Updated: 04:05 GMT, Jun 21, 2016 | Published: 04:05 GMT, Jun 21, 2016 |
0 Comments
1312
This post was written by : Shailu

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1ஃ4 கிலோ
வெங்காயம் – 2
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீ ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – 1 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் – 2 டீ ஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு

செய்முறை

சிக்கனை நன்கு சுத்தம் செய்து விட்டு சிறு சிறுத் துண்டுகளாக்கி கொள்ளவும். மற்ற பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை எட்டாக நறுக்கி அதை தனித் தனியே பிரித்து வைத்துக் கொள்ளவும். பின்னர். ஒரு பாத்திரத்தில், எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவும்.

அத்தோடு, மசாலாத் தூள்களை சேர்த்து சிறிது நேரம் வதக்கி உடனே சிக்கன் துண்டுகளையும் சேர்த்து வதக்கவும்.பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மிதமான தீயிலேயே பத்து நிமிடம் வேக விடவும்.(இடையில் இருமுறை கிளறி கொள்ளவும்.)

சிக்கன் வெந்ததும், நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து பிரட்டி இரண்டு நிமிடத்தில் மல்லித்தழை தூவி இறக்கி விடவும். தற்போது, சுவையான ஒனியன் சிக்கன் ஃப்ரை தயார்…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg