Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீர்த்தத்தின் மகிமை…!

In ஆன்மீகம்
Updated: 08:39 GMT, Jun 21, 2016 | Published: 07:30 GMT, Jun 21, 2016 |
0 Comments
1546
icon_com
This post was written by : Shailu
theertham

ஆலய வழிபாட்டு முறைகளில் பிரசாதமாக புனிதத் தீர்த்தம் வழங்குவதும் ஒன்று. வைணவ திருத்தலங்களில் வழங்கும் துளசி தீர்த்தம் ரத்தத்தை சுத்தம் செய்வதுடன், உடலில் பிராணசக்தி மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வலுப்படுத்துகின்றது.

மிகத் தொன்மையான காலத்தில் கிரேக்க நாட்டு தேவாலயங்களில் துளசி கலந்த புனித நீர் மக்களுக்கு தீர்த்தமாக விநியோகிக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.

துளசி தீர்த்தம், சுவாசத்திற்கு சிறந்த புத்துணர்ச்சி தரும். பெருமாள் கோயிலில் வழங்கப்படும் துளசி ஊறிய நீரை உட்கொண்டு வந்தால் இதயநோய்கள் குணமாவதுடன் இதயமும் வலிமை பெறும்.

‘ஹரி பக்தி சுதோயம்’ எனும் நூலில் துளசியின் மகிமை விரிவாக சொல்லப்பட்டுள்ளது. துளசி இலையின் நுனியில் நான்முகனும், மத்தியில் திருமாலும், அடியில் சிவனும் மற்றைய பகுதிகளில் பன்னிரு ஆதித்யர்களும், பதினோரு ருத்திரர்களும், எட்டு வசுக்களும், இரு அஸ்வினி தேவர்களும் எழுந்தருளியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ஏலக்காய், லவங்கம், வால்மிளகு, ஜாதிபத்திரி, பச்சைக்கற்பூரம் ஆகியவற்றில் முதல் நான்கை வகைக்கு ஒரு பங்கும், பச்சைக்கற்பூரம் கால் பங்கும் சேர்க்கவேண்டும். முதல் நான்கையும் உலர்த்தி இடித்து பொடித்துக் கொண்டு பின் அத்துடன் பச்சைக்கற்பூரத்தையும் சேர்த்து இடித்து, நல்ல நீருடன் கலந்து கொள்கிறார்கள். பிறகு தாமிர உலோகத்தாலான பாத்திரத்தில் சேமித்து பெருமாள் கோயிலில் பிரசாதமாக வழங்குகிறார்கள்.

இந்த தீர்த்தப்பொடியை மூன்று விரல் அளவு (த்ரிகடுப்ரமாணம்) எடுத்து ஒரு தாமிர பாத்திரத்தில் தண்ணீரில் கலந்து முதல்நாள் இரவு வைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடிந்தவுடன் அருந்த, சகல நோய்களும் நீங்கும் என்பார்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg