Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீபம் ஏற்ற வேண்டிய திசைகளும், பலன்களும்

In ஆன்மீகம்
Updated: 09:55 GMT, Jun 21, 2016 | Published: 09:50 GMT, Jun 21, 2016 |
0 Comments
1158
icon_com
This post was written by : Shailu
lamp

இந்துக்களின் வழிப்பாட்டு முறையில், பல வகைள் உண்டு, இலைகள், பூக்கள், பழங்கள், பிரசாதப் பொருட்கள் என்னும் பொருட்களை வைத்து அவர்கள் தங்கள் வழிப்பாடுகளை மேற்கொள்வார்கள்.

அந்த வகையில் தீபம் ஏற்றி வழிப்படும் முறையும் மிக முக்கியத்துவம் பெறுகின்றது. எனவே அவற்றிற்கு சில முறைகள் இருக்கின்றது. அதில் தீபம் ஏற்றவேண்டிய திசைகளையும், அதனால் ஏற்படும் பலன்களையும் பார்க்கலாம்.

* கிழக்குத் திசையில் தீபம் ஏற்றி வைத்தால் வீட்டில் பீடை அகலும், துன்பங்கள் அகலும்.
* மேற்கு திசையில் தீபம் ஏற்றி வைத்தால் சனி தோஷம், கிரகதோஷம், சல்லிய தோஷம், பங்காளிப்பகை, கடன் தொல்லை ஆகியவை தீரும்.
* வடக்குத் திசையில் தீபம் ஏற்றி வைத்தால் திருமணத் தடை, கல்வித் தடை நீங்கும். செல்வம் உண்டாகும்.
* தெற்குத் திசையில் தீபம் ஏற்றக்கூடாது. இது அசுப காரியங்களுக்கு மட்டுமே.

தெற்குப் பார்த்த வீட்டில் குடியிருப்பவர்கள் காலை, மாலை வீட்டின் முன் விளக்கேற்றி வைக்கும்போது அது கிழக்குத் திசை பார்த்து இருக்க ஏற்றி வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை பார்க்க ஏற்றி வைக்கக் கூடாது.

* ஒரு முகம் ஏற்றி வைத்தால் மத்திம பலன் கிடைக்கும்.
* இரண்டு முகங்கள் ஏற்றி வைத்தால் குடும்ப ஒற்றுமை உண்டாகும்.
* மூன்று முகங்கள் ஏற்றி வைத்தால் புத்திரனால் சுகம் பெறலாம்.
* நான்கு முகங்கள் ஏற்றி வைத்தால் பசு போன்ற செல்வம் தரும்.
* ஐந்து முகங்கள் ஏற்றி வைத்தால் செல்வத்தைப் பெருக்கும்.
*ஒரு முகம் ஏற்றினால் கிழக்குப் பார்த்து விளக்கினை வைக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg