Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சகல சௌபாக்கியம் அருளும் தூர்வாஷ்டமி விரதம்

In ஆன்மீகம்
Updated: 04:42 GMT, Jun 22, 2016 | Published: 04:29 GMT, Jun 22, 2016 |
0 Comments
1261
icon_com
This post was written by : Risha
arugampul

அருகம்புல்லை தூர்வை என்பார்கள். அதை லட்சுமி சொரூபமாக பாவிக்கவேண்டுமென்று வேதம் உபதேசிக்கிறது. அவ்வகையில் தூர்வையை ஆராதிக்கும் தினம் ஆவணி மாதத்தின் சுக்லபட்ச அஷ்டமியாகும். இதற்கு தூர்வாஷ்டமி என்று பெயர்.

இந்த தூர்வாஷ்டமி விரதத்தை அனைவரும் கடைப்பிடிக்கலாம். குறிப்பாக பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். இவ்விரதம் பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட ஓர் உன்னதமான விரதமாகும்.

இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பதால் சகல சௌபாக்கியங்களும் ஏற்படும். நமது பாரத தேசத்தை வளமாக வைத்துக்கொள்வதற்கும்; எல்லா இடத்திலும் உணவு, நீர், ஆடை நிறைவாகக் கிடைப்பதற்கும்; நீண்ட ஆயுளுடைய புத்திமான்களான- வீரர்களான புத்திரர்களைப் பெறுவதற்கும்; நினைத்த காரியங்கள் நிறைவேறுவதற்கும் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

வழிபாட்டு முறை:
தூர்வாஷ்டமி அன்று காலை நித்ய கர்மாக்களை முடித்துக்கொண்டு, நித்ய பூஜையையும் செய்தபிறகு இவ்விரதத்தைச் செய்யவேண்டும். பூஜையறையை சுத்தம்செய்து கோலமிட்டு விளக்கேற்றி, சுத்தம் செய்யப்பட்ட பலகையின்மேல் கோலமிட்டு, சுத்தமான இடத்தில் விளைந்த அருகம்புல்லைப் பறித்துவந்து அப்பலகையின்மேல் பரப்பி, அதன்மேல் சிவலிங்கம் இருந்தால் விசேஷம் அல்லது படம் ஏதாவது ஒன்றை வைத்துப் பூஜிக்கலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg