Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுப காரியங்கள் நிறைவேறும் ஆஞ்சநேயர் வழிபாடு

In ஆன்மீகம்
Updated: 05:10 GMT, Jun 22, 2016 | Published: 05:04 GMT, Jun 22, 2016 |
0 Comments
1403
This post was written by : Risha

செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் தொடர்ந்து ஹனுமன் சாலீசா துதியைப் பாராயணம் செய்து வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். அத்துடன், தொடர்ந்து ஒரு மண்டலம் பாராயணம் செய்தால் தடைப்பட்ட திருமணம் உட்பட சுப காரியங்கள் நிறைவேறும் என தெரிவிக்கப்படுகிறது.

வீடுகளில் ஆஞ்சநேயர் வழிபாடு உகந்ததா என பலர் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. அவ்வாறு வீடுகளில் தனியான பூஜை அறை அமைத்து வழிபடலாம். ஆனால் பூஜை காலத்தில் பரிசுத்தமாக இருத்தல் அவசியமாகும்.
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்ய சில விதிமுறைகள் உள்ளன. அவை, ஆஞ்சநேயரை வீட்டில் பூஜை செய்யும் பக்தர்கள் தனியாக ஒரு பூஜை அறையை அமைத்துக் கொள்ள வேண்டும். அங்கே ஆஞ்சநேயரின் படத்தையோ, சிலையையோ வைக்க வேண்டும். பூஜை காலத்தில் பரிசுத்தமாக இருக்க வேண்டும். விரத காலங்களில் பெண் வாசனை கூடாது.
பூஜை அறையினுள் துளசி இலைகள் போட்டு தீர்த்தம் வைத்திருக்க வேண்டும். சுவாமிக்கு பிடித்தமான நிவேதனப் பொருட்களையும் வைத்திருக்க வேண்டும். பூஜை செய்பவர்கள் உடல் மட்டுமின்றி உள்ளமும் சுத்தமாக இருக்க வேண்டும்.
அதேபோன்று பூஜை அறையையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறை தரையை துணியால் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறையில் எப்போதும் ஆராதனை புகை மனம் வீச வேண்டும். இவையெல்லாம் நாம் ஆஞ்சநேயருடன் மனம் ஒன்ற உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg