Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இருமல் சளி குணமாக பாட்டி சொன்ன வீட்டு மருத்துவம்

In
Published: 05:35 GMT, Jun 22, 2016 |
0 Comments
1330
icon_com
This post was written by : Risha
article-1906-300x210

இருமல் சளி குணமாக: சித்தரைத்தை மற்றும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுத்து காய்ச்சி வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.

அல்லது
தூதுவளை இலை 15 கிராம் அளவில் எடுத்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லிவரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் என்பன குணமாகும்.

இருமல்: தூங்க போகும் முன் ஒரு கப் சூடான தண்ணீரில் 1 கரண்டி உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையை நீக்கும்.

தொண்டை கரகரப்பு நீங்க: அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை விழுங்கினால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

தொண்டை வலி: பால் இல்லாத தேநீருடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து வந்தால் தொண்டை வலி நீங்கும்.

தும்மல் வராமல் இருக்க: தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் கலந்து சாப்பிட்டால் தும்மல் வராது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg