Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரமழான் கால நோன்பு கஞ்சி

In
Updated: 05:53 GMT, Jun 22, 2016 | Published: 05:48 GMT, Jun 22, 2016 |
0 Comments
1211
icon_com
This post was written by : Risha
நோன்புக் கஞ்சி 1

தேவையான பொருட்கள்: 

பச்சரிசி – 150 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
வெந்தயம் – 1/2 கரண்டி
சீரகம் – 1/2 கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 கரண்டி
பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
பிரியாணி இலை – 1
கொத்தமல்லி – சிறிது
புதினா – சிறிது தேங்காய்
பால் – 1 கோப்பை
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
நெய் – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
முதலில் அரிசியை நன்கு நீரில் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும். பின் சீரகம் மற்றும் வெந்தயத்தை போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 750 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி, அரிசியைப் போட்டு நன்கு 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

தண்ணீரானது நன்கு கொதித்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மல்லி, புதினா, பிரியாணி இலை, அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விட்டு, தீயை குறைவில் வைத்து, பாத்திரத்தை மூடி 10-15 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும்.

கலவையானது நன்கு வெந்ததும், அதனை பருப்பு மத்து கொண்டு நன்கு மசித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, தேங்காய் பாலை ஊற்றி, நன்கு நுரை வரும் வரை கொதிக்க விட்டு, மசித்து வைத்துள்ள கலவையை ஊற்றி, ஒரு கொதி விட்டு இறக்கி, தனியாக ஒரு பாத்திரத்தில் உற்றினால், சுவையான நோன்பு கஞ்சி தயார்!!!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg