Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எரிபொருள் தகவல் மோசடி: பாரிய இழப்பை எதிர்நோக்கும் மிட்ஸுபிஷி

In வணிகம்
Updated: 08:11 GMT, Jun 22, 2016 | Published: 08:10 GMT, Jun 22, 2016 |
0 Comments
1049
icon_com
This post was written by : Risha
mit

மிட்ஸுபிஷி மோட்டர்ஸ் நிறுவனத்தில் இடம்பெற்ற எரிபொருள் திறன் தகவல்களில் பணியாளர்கள் மோசடியை அடுத்து குறித்த நிறுவனமானது தற்போதைய வர்த்தக ஆண்டில் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர இழப்பை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பான் கார் உற்பத்தி நிறுவனமான மிட்ஸுபிஷி கடந்த பல தசாப்தங்களாக 6.20 இலட்சத்துக்கும் மேற்பட்ட இலகு ரக வாகனங்களின் மைலேஜ் சோதனை தகவல்களை வேண்டும் என்றே மோசடியாக 5 முதல் 10 சதவீதம் வரை அதிகம் மதிப்பீடு செய்து காட்டியிருந்தது.

மோசடி காரணமாக மிட்ஸுபிஷி நிறுவனமானது இந்த ஆண்டின் நிகர இலாபத்தில் மார்ச் மாதமளவில் ஏற்கனவே 39 வீத சரிவை எதிர்நோக்கியதாக அறிவித்திருந்தது. அதுமட்டுமின்றி அதன் சந்தை மதிப்பு 3 பில்லியன் அமெரிக்க டொலர் வீழ்ச்சியை எதிர்நோக்கியது.

அதனை தொடர்ந்து கடந்த மே மாதம் சக கார் உற்பத்தியாளரான நிசான் நிறுவனம் கூடிய பங்குகளை கட்டுப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg