Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போயிங் – ஈரான் எயர் இடையே வரலாற்று ரீதியான உடன்பாடு

In வணிகம்
Updated: 08:24 GMT, Jun 22, 2016 | Published: 08:23 GMT, Jun 22, 2016 |
0 Comments
1108
icon_com
This post was written by : Risha
boeing

இருபத்தைந்து பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 100 விமானங்களை ஈரான் எயர் விமானச்சேவை நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் வகையிலான ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக போயிங் விமானச்சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த உடன்பாடானது அமெரிக்க – ஈரான் நாடுகளிடையேயான பொருளாதார உறவில் முக்கிய மைல்கல்லாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த உடன்பாட்டை மேற்கொள்வதற்கு அமெரிக்க அரசாங்கத்தின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்து வருவதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்படின் கடந்த 1979ஆம் புரட்சிக்கு பின்னர் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளிடையே ஏற்படுத்தப்படும் பாரிய வர்த்தக நடவடிக்கையாக இது அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg