Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மடுத்திருத்தளத்தின் ஆடி மாத திருவிழா நாளை ஆரம்பம்

In ஆன்மீகம்
Published: 15:33 GMT, Jun 22, 2016 |
0 Comments
1098
icon_com
This post was written by :
images

மன்னார் மடுத்திருத்தளத்தின் ஆடி மாத திருவிழா நாளை(வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

கொடியேற்றத்தை தொடர்ந்து எதிர்வரும் 1 ஆம் திகதி வரை தினமும் காலை 6 மணிக்கு தமிழிலும், காலை 6.45 மணிக்கு சிங்கள மொழியில் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து தினமும் மாலை 6.15க்கு செபமாலை மற்றும் நற்கருணை வழிபாடு என்பன இடம்பெறவுள்ளது. அத்துடன், எதிர்வரும் 1 ஆம் திகதி மாலை 6 மணிக்கு வேஸ்பர் ஆராதனை வழிபாட்டுடன் நற்கருணை திருபவனி இடம்பெறவுள்ளது.

மேலும், மன்னார் மடுத்திருத்தளத்தின் ஆடி மாத திருவிழாத் திருப்பலியானது எதிர்வரும் 2 ஆம் திகதி சனிக்கிழமை காலை 6.15 மணிக்கு கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகரர் ஆயர் யோசேப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் சிலாபம் மறைமாவட்ட ஆயர் வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை, யாழ் மறைமாவட்ட ஆயர் யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அன்றாடி ஆண்டகை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கவுள்ளனர்.

மடு திருத்தளத்தின் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு சுமார் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல வித ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மடு ஆலய பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை அடிகளார் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg