Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கத்தரிக்காயின் மருத்துவ குணங்கள்!

In
Published: 06:34 GMT, Jun 23, 2016 |
0 Comments
1211
icon_com
This post was written by : Anojkiyan
brinjal

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின் ஏ, பி சத்துக்கள் உள்ளன. இதில் பொட்டாசியம் மிகுதியாக இருக்கிறது. இதயத்துக்கு பலம் கொடுக்கிறது. நார்ச்சத்து மிக்கது. இரும்புச்சத்து மிக்க கத்தரிக்காய் பெருங்குடலில் புற்றுவராமல் தடுக்கிறது. தூக்கமின்மையை போக்கும் மருந்தாக விளங்குகிறது. சளி, இருமல் பிரச்னை சரியாகும்.

கத்தரிக்காயில் கந்தகசத்து மிகுதியாக இருப்பதால் உடலுக்கு உஷ்ணத்தை தரும். ஒவ்வாமை நோய்களை போக்கும். ஈரலுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. மூச்சு முட்டுதல், வறட்டு இருமல் போன்றவற்றுக்கு கத்தரிக்காய் மருந்தாகிறது. கத்திரிக்காயில் பலவகை இருந்தாலும் நீல நிறம், நாட்டு கத்தரிக்காய் சமையலுக்கு நல்லது. விதையில்லாத, பிஞ்சு கத்தரிக்காயை பயன்படுத்தலாம்.

இதயத்துக்கு நல்லது. நுரையீரல், சிறுநீரக கோளாறுகளை போக்கும். சீரண உறுப்புகளுக்கு நல்லது. மலச்சிக்கலை போக்குகிறது. இலைகள் சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. தோல் வியாதி உள்ளவர்கள் கத்தரிக்காயை குறைவாக பயன்படுத்த வேண்டும். இவர்கள் பிஞ்சு கத்தரிக்காய் சாப்பிடுவது நல்லது.

வாயு பெருக்கம், ஈரத்தினால் ஏற்படும் நோய்களை தடுக்கிறது. வாத நோய்களை சரிசெய்கிறது. கத்தரிக்காய் இதயத்தை பாதிக்கும் கொழுப்புசத்தை தடுக்கிறது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg