Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரவா கட்லெட்

In
Published: 06:56 GMT, Jun 23, 2016 |
0 Comments
1195
icon_com
This post was written by : Anojkiyan
rava-cutlet-21-1466510879

தேவையான பொருட்கள்

ரவை – 1/2 கப்
ஸ்வீட் கார்ன் – 1/4 கப்
குடைமிளகாய் – 1/4 கப்
பச்சை மிளகாய் – 1
வெங்காயம் – 1/4 கப்
கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன்
பிரட் தூள் – சிறிது
மைதா – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – 1 கப்

செய்முறை

முதலில் ஒரு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து சூடேற்றி, பின் அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, ரவை, குடைமிளகாய், ஸ்வீட் கார்ன், பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, சிறிது உப்பு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, 2-3 நிமிடம் தண்ணீர் வற்றும் வரை கிளறி விட்டு இறக்க வேண்டும். பின்னர் மைதாவை தண்ணீர் சேர்த்து சற்று ஓரளவு தண்ணீர் போல கலந்து கொள்ள வேண்டும். பின்பு கையில் எண்ணெயை தடவிக் கொண்டு, ரவா கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, உங்களுக்கு பிடித்த வடிவில் தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

பின் தட்டி வைத்துள்ளதை ஒவ்வொன்றாக எடுத்து, மைதாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, பின் ஒருமுறை மீண்டும் தட்டி, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ளதை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ரவா கட்லெட் ரெடி!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg