Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லோட்டஸ் டவருக்கான தொலைத் தொடர்பாடல் சேவையை வழங்கும் டெலிகொம்

In வணிகம்
Updated: 13:16 GMT, Jun 24, 2016 | Published: 08:05 GMT, Jun 23, 2016 |
0 Comments
1102
icon_com
This post was written by : Anojkiyan
pio

தேசிய தகவல் தொடர்பு தொழி­ல்நுட்ப தீர்­வுகள் வழங்­கு­ன­ரான ஸ்ரீலங்கா டெலிகொம் கொழும்பு லோட்டஸ் டவர் செயற்­றிட்­டத்­திற்­கான தொலைத்­தொ­டர்­பாடல் சேவை வழங்­கு­ந­ராக தன்னை அறி­விப்­பதில் பெரு­மைப்­ப­டு­கி­றது. இந்த செயற்­றிட்டம் தொடர்­பாக ஸ்ரீலங்கா டெலிகொம்மும் தொலைத்­தொ­டர்­பாடல் ஒழுங்­கு­றுத்தும் ஆணைக்­கு­ழுவும் அண்­மையில் புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் ஒன்றில் கைச்­சாத்­திட்­டுள்ன.

இதற்­கான நிகழ்வில் China National Electronics Import and Export Corporation பிர­தி­நி­தி­களும் கலந்­து­கொண்­டனர்.இந்த’லோட்டஸ் டவர்’கட்­டி­மு­டிக்­கப்­பட்­டதும், அதன் உயரம் 350 மீட்­ட­ரா­கவும், தென்­னா­சி­யா­வி­லேயே உய­ர­மான கோபு­ர­மா­கவும் இருக்கும்.

அத்­துடன், இது தொலைத்­தொ­டர்­பாடல், டிஜிட்டல் டி.வி .மற்றும் வானொ­லிக்­கான தனித்த அனுப்­பீட்டு மைய­மாக அமைந்து, அனுப்­பீட்டின் தரத்தை மேம்­ப­டுத்­து­வ­துடன், நகரின் காபன் அடிச்­சு­வ­டு­களை குறைப்­ப­தற்கும் உதவும்.

அது­மட்­டு­மன்றி,கொழும்பு நக­ருக்கு வரும் சுற்­றுலா பய­ணி­களை கவரும் விதமாக, கடைகள், அங்­கா­டிகள், உண­வுச்­சா­லைகள், கொண்­டாட்டக் கூடங்கள் மற்றும் கண்­கா­ணிப்புப் பீடம் போன்­ற­வையும் அமைந்­தி­ருக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg