Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடமாகாண வர்த்தக வாணிப அதிகார சபை உருவாக்கல் தொடர்பில் கலந்துரையாடல்

In வணிகம்
Updated: 12:56 GMT, Jun 24, 2016 | Published: 12:56 GMT, Jun 24, 2016 |
0 Comments
1170
icon_com
This post was written by : Anojkiyan
vaDA

கடந்த யுத்த கால இடம்பெயர்வுகளுக்கு பின்னர் வடமாகாண வர்த்தகர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தமது தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வர்த்தகர்களின் அபிவிருத்தி தொடர்பில் 5 மாவட்டங்களையும் ஒன்றிணைத்து அதிகார சபை ஒன்றினை உருவாக்கும் நோக்கோடு நேற்றைய தினம்(வியாழக்கிழமை) வடமாகாண வர்த்தகர்களுடனான சந்திப்பு யாழ் வணிகர் கழகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் வடமாகாண வர்த்தக வணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடமாகாண வர்த்தக சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். மன்னார் மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகள் தவிர்க்க முடியாத காரணங்களினால் கலந்து கொள்ளவில்லை.

இதன்போது மாவட்ட சங்கங்களின் செயற்பாடு, கிளைச்சங்கங்களின் பதிவு, அதிகார சபைக்கான நியதிச்சட்ட உருவாக்கம், சிறுவார்த்தகர்களுகான கடனுதவிகள் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg