Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உருளைக்கிழங்கு வடை

In
Updated: 14:51 GMT, Jun 24, 2016 | Published: 14:51 GMT, Jun 24, 2016 |
0 Comments
1247
icon_com
This post was written by : Anojkiyan
vadai

தேவையான பொருட்கள் 

உருளைக்கிழங்கு – 4 (வேக வைத்து தோலுரித்தது)
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – அரை கப்
பச்சை மிளகாய் – 5
இஞ்சி – 1 துண்டு
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை உரித்து கட்டியில்லாதவாறு மசித்துக் கொள்ள வேண்டும். பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு கடலை மாவு, அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி இறக்கி, உருளைக்கிழங்குடன் சேர்த்து, கொத்தமல்லியை போட்டு, நன்கு பிசைய வேண்டும்.

மாவு தளர்வாக இருந்தால் சிறிது அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து கொள்ளவும்.
ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வடை ரெடி!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg