Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நந்திகளின் வகைகள்!

In ஆன்மீகம்
Updated: 12:30 GMT, Jun 25, 2016 | Published: 12:29 GMT, Jun 25, 2016 |
0 Comments
1188
icon_com
This post was written by : Anojkiyan
tnj a

1. இந்திரநந்தி (போகநந்தி) – கோவிலுக்கு வெளியே இறைவனை (சிவபெருமானை) நோக்கி இருப்பது 5 ம் பிரகாரத்தில் ஆகும்

2. பிரம்மநந்தி (வேதநந்தி) – இது மிக பெரிய நந்தி இதற்கு வேத நந்தி (அ) வேதவெள்விடை என்று பெயர் பெரிய மண்டபத்தில் கம்பீரமாக வீற்றிருப்பது ஆகும்.

3. விஷ்ணுநந்தி – மால்விடை சிவபெருமான் திரிபுரம் எரிக்க முற்பட்டபோது விஷ்ணு இடப வடிவமெடுத்து அவரை (சிவபெருமானை) ஏந்தியது ஆகும் சிவன் சன்னதி அருகில் உள்ளது

4. ஆத்மநந்தி – கொடி மரத்தருகில் இருப்பது (இறைவன் – பதி, ஆத்மநந்தி – பசு, கொடிமரம் – பாசம்) பிரதோஷ காலத்தில் வழிபாட்டிற்குரியது ஆகும் ஆத்மநந்தி (அ) சிலாத நந்தி

5. தருமநந்தி – தருமம் நந்தியாக நிலைத்திருப்பது தரும நந்தி மகா மண்டபத்தில் உள்ளது சுவாமி (சிவபெருமான்) அருகில் உள்ளது சிறியதாக மூலவரின் வயிற்றுப்பகுதியான தொப்புள் பகுதியை உயிர்நிலையாகக்கொண்டு அதன் மட்டத்திலிருந்து நேராக நந்தி நாசி அமைந்து மூலவருக்கு உயிர்நிலை தருவதாக அமைந்து என்றும் ஆனந்த நிலையில் உள்ளார் இதன் மூச்சு காற்று சுவாமியின் (சிவபெருமானின்) மீது படுகிறது

மேலும் 2 நந்தி

1. அதிகார நந்தி – உட்கோபுர வாயிலில் வடக்கு நோக்கி இருப்பது ஆகும்
2. விருஷப நந்தி – கருவறை பின்புறம் இருப்பது ஆகும்

நந்தி அருள் பெற்ற நாதர் 8 பேர்

1. சனகர்
2. சனந்தனர்
3. சனதனர்
4. சனற்குமாரர்
5. சிவயோகமாமுனி
6. பதஞ்சலி
7. வியாக்ரபாதர்
8. திருமூலர்
என்ற 8 பேர் நந்தியெம் பெருமான் அருள் பெற்றவர்கள் ஆவார்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg