Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்ரேலிங் பவுண்ஸ் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி

In வணிகம்
Updated: 14:12 GMT, Jun 25, 2016 | Published: 14:12 GMT, Jun 25, 2016 |
0 Comments
1279
This post was written by : Anojkiyan

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருப்பதா அல்லது வெளியேறுவதா என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்கள் வாக்கெடுப்பில் ஆரம்பகட்ட முடிவுகள் வெளியாக ஆரம்பித்ததை தொடர்ந்து, பிரித்தானிய நாணயப் பெறுமதியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவுபெற்று வாக்குச் சாவடிகள் மூடப்பட்டமையின் பின்னர், ஸ்ரேலிங் பவுண்ஸ் பெறுமதியில் அதிகரிப்பே ஏற்பட்டது. இருப்பினும் பின்னர் அது படிப்படியாக குறைவடைந்து சென்றதாக பொருளியல் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், பவுண்ஸின் பெறுமதி 10 சதவீதமாக குறைவடைந்து தற்போது 1.3305 எனும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஒரு பவுண் ஸுக்கான அமெரிக்க டொலரின் பெறுமதி 1.34 என குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் ஒரு பவுண் ஸுக்கான யூரோவின் பெறுமதி 1.22 ஆக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீழ்ச்சியானது, 1985 ஆம் ஆண்டுக்கு பிறகு பவுண் ஸுக்கு ஏற்பட்டுள்ள பாரிய வீழச்சி என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg