Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வர்த்தக கடன்களைப் பெறுவதில் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படலாம்!

In வணிகம்
Updated: 14:19 GMT, Jun 25, 2016 | Published: 14:18 GMT, Jun 25, 2016 |
0 Comments
1173
icon_com
This post was written by : Anojkiyan
erg

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியுள்ளதன் பாதிப்பை இலங்கை எதிர்கொள்ளலாம் என எச்சரித்துள்ள இலங்கை வர்த்தக சம்மேளனம், வர்த்தக கடன்களை பெற்றுக்கொள்வதில் நெருக்கடி ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘பிரித்தானியாவில் இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுகள் காரணமாக வெளிநாட்டு சூழல் குழப்பகரமானதாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதால் இலங்கை வெளிநாட்டுகடன்களை பெற்றுக்கொள்வதில் நெருக்கடியை எதிர்கொள்ளலாம்.

இதன் காரணமாக ஏற்றுமதியாளர்கள் தங்கள் சந்தையை பன்முகப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எனினும், இந்தத் தாக்கம் 2008 நிதிநெருக்கடி போன்று காணப்படாது, அவ்வேளையிலும் இலங்கை கடும் பாதிப்புகள் எதனையும் எதிர்கொள்ளவில்லை.

அதேவேளை, அந்தக் காலப்பகுதியை விட இலங்கை அதிகளவுக்கு சர்வதே சந்தை அனுபவத்தைக் கொண்டிருக்கும் நாடாக மாறியுள்ளதால் அதிகளவு தாக்கத்தை இம்முறை எதிர்கொள்ளாது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரித்தானியாவின் புதிய உறவுகள் குறித்த பேச்சுக்கள் இரண்டுவருட காலத்திற்கு நீடிக்கலாம் என்பதால் சர்வதேச வர்த்தகத்தில் இந்தத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை தற்போதைக்கு மதிப்பிடமுடியாது.

பிரித்தானியா, ஐரோப்பிய ஓன்றியத்தின் உறுப்பு நாடுகளுடன் எத்தகைய வர்த்தக உறவுகளை கொண்டிருக்கப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியுள்ளது. இதேவேளை, ஜி.எஸ்பி வரிச்லுகைக்குள் பிரித்தானியா வராது’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg