Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ராகி கருப்பட்டி பணியாரம்

In
Updated: 04:18 GMT, Jun 26, 2016 | Published: 14:46 GMT, Jun 25, 2016 |
0 Comments
1186
icon_com
This post was written by : Anojkiyan
ragi

தேவையான பொருட்கள்

ராகி மாவு – 1 கப்
கருப்பட்டி – கால் கப்
துருவியத் தேங்காய் – 1/4 கப்
ஆப்பசோடா, உப்பு – 1/4 தேக்கரண்டி
ஏலக்காய்ப் பொடி – சிறிது
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை

கருப்பட்டியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி கொள்ளவும். முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, வடிகட்டிய கருப்பட்டி தண்ணீர், ஆப்பசோடா, உப்பு, ஏலக்காய்ப் பொடி ஆகியவற்றை சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் தேங்காய்த் துருவல் சேர்த்து, கட்டி சேராதவாறு நன்கு கலந்து, 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பணியார கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு பணியாரங்களாக சுட்டு எடுக்க வேண்டும். சுவையான சத்தான ராகி கருப்பட்டி பணியாரம் ரெடி.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg