Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெட் பஜ்ஜி

In
Published: 07:22 GMT, Jun 26, 2016 |
0 Comments
1229
icon_com
This post was written by :
Bried bajji

தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – ½ கப்
கடலை மாவு – ¼ கப்
அரிசி மாவு – ¼ கப்
பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
ஓமம் – ½ தேக்கரண்டி
சாட் மசாலா தூள் – ¾ தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
பாண் துண்டுகள் – 4 முதல் 5
எண்ணெய் – தேவையான அளவு
செய்யும் முறை
ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு எடுத்து அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா தூள், ஓமம் சேர்த்து தண்ணீர் ஊற்றி கிளறவும். பின் சமையல் சோடா ஒரு சிட்டிகை சேர்த்து மாவை நன்றாக கிளறி வைக்கவும். பின்னர் பாண் துண்டுகள் எடுத்து சதுரமாக வெட்டி அதை மாவுக் கலவையில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான பிரெட் பஜ்ஜி தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg