Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச பங்கு சந்தை சரிவால் 8ž லட்சம் கோடியை இழந்த உலக செல்வந்தர்கள்

In வணிகம்
Published: 08:43 GMT, Jun 26, 2016 |
0 Comments
1199
icon_com
This post was written by :
Profit loss

தற்பொழுது சர்வதேச பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள பாரிய சரிவின் காரணமாக உலகில் உள்ள மிகப்பெரிய 400 செல்வந்தர்களுக்கு 8 லட்சம் கோடி இந்திய ரூபாய் அளவிலான தொகை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம், சர்வதேச அளவில் உள்ள செல்வந்தர்கள் பலர் தமது வருவாயில் 3.2 சதவீத லாபத்தை இழந்துள்ளனர்.

இதில், ஐரோப்பாவின் மிகப்பெரிய செல்வந்தரான அமொன்சியோ ஆர்டெகா 40 ஆயிரம் கோடி இந்திய ரூபாய் அளவிலான தனது தொகையை இழந்துள்ளார். அதேபோன்று. மேலும் 9 செல்வந்தர்கள் தலா 7 ஆயிரம் கோடி இந்திய ரூபாயை இழந்துள்ளனர்.

இவ்வாறு தமது வருவாயை இழந்த செல்வந்தர்களில் மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், ஜெப் பெஷோஸ், ஜெரால்டு கவென்திஸ், குரோஸ்வெனர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

இங்கிலாந்தில் அண்மையில் இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பின்படி, அந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரும்பான்மையானவர்கள் வாக்களித்திருந்தனர். இதனால் இங்கிலாந்து மட்டுமின்றி சர்வதேச பங்கு சந்தைகளிலும் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையே குறித்த செல்வந்தர்களின் வாருவாய் இழப்புக்கும் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg