Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரழமானில் இரவுத் தொழுகை

In ஆன்மீகம்
Published: 15:24 GMT, Jun 26, 2016 |
0 Comments
1139
icon_com
This post was written by :
Night prayers

இஷாத் தொழுகையினது பின் சுன்னத்திலிருந்து சுபஹுடைய அதான் வரையிலான இரவு வேளையில் தொழப்படும் சுன்னத்தான தொழுகைக்கு இரவுத் தொழுகை என்று கூறப்படும்.

அறபியில் இதற்கு ‘கியாமுல் லைல்’ என்று கூறுவர். ரமழான் மாதத்தில் மட்டுமல்லாது ஏனைய காலங்களிலும் இந்த இரவுத் தொழுகைக்குத் தனியான சிறப்பம்சங்கள் இருக்கின்றன. ஆன்மீக முன்னேற்றத்தில் இரவுத் தொழுகையின் பங்கு முக்கியமானதாகும்.

இரவு நேரத்தில் தமது படுக்கையை விட்டும் எழுந்து தொழும் நல்லடியார்கள் பற்றிப் பின்வரும் வசனம் இவ்வாறு சிறப்பித்துப் கூறுகின்றது.

‘அவர்களது விலாப்புறங்கள் படுக்கைகளை விட்டும் விலகியிருக்க, அவர்கள் தமது இரட்சகனை அச்சத்துடனும், ஆதரவுடனும் பிரார்த்திப்பார்கள். மேலும், நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்லறங்களில்) செலவும் செய்வார்கள்.’

‘எனவே, அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றிற்குக் கூலியாக அவர்களுக்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சியை எந்த ஆன்மாவும் அறிந்து கொள்ளாது.’ (32:16-17)

‘நபி(ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையில் அதிக நாட்;டம் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் தமது கால் பாதங்கள் வீங்கும் அளவுக்கு நின்று வணங்குவார்கள். உங்களுடைய முன்-பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டதல்லவா? எனக் கேட்டால் ‘நான் நன்றியுடைய அடியானாக இருக்கக் கூடாதா? என்று கேட்பவர்களாக இருந்தார்கள்’ (புஹாரி: 1130, 4836, 6471, முஸ்லிம்:7302,7303)

பொதுவாக இரவுத் தொழுகை சிறப்பானது என்றாலும் ரமழான் காலங்களில் இரவுத் தொழுகை இன்னும் அதிக சிறப்பைப் பெறுகின்றது.

எனவே, ஏனைய காலங்களை விட ரமழான் காலத்தில் இரவுத் தொழுகை முக்கியத்துவம் பெறுகின்றது. நபி(ச) அவர்களது காலத்தில் தொடராக ரமழான் இரவுத் தொழுகை ஜமாஅத்தாகத் தொழப்படவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg