Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு சிறந்த உணவுகள்

In
Published: 14:44 GMT, Jun 27, 2016 |
0 Comments
1261
icon_com
This post was written by :
Child bone development

தினமும் உங்கள் குழந்தையின் உணவுமுறையில் பால் உணவுகளை அதிகளவில் சேர்த்து கொள்ளுங்கள். அது, பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதிலிருக்கும் கல்சியம் மற்றும் உயர்ரக புரதச்சத்து எலும்புகள் மற்றும் தசைகளின் வலிமையை அதிகரித்து நன்கு வளர உதவுகிறது.

முட்டையில் புரதம், விட்டமின் டி, விட்டமின் பி 2, ரிபோப்லாவின் போன்ற ஏனைய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. இவை குழந்தைகளின் எலும்புகள் நன்கு ஆரோக்கியமாக வளர பயனளிக்கின்றன.

சிக்கனில் புரதச்சத்து நிறைய இருக்கிறது. இது பருவமடைந்த பிறகும் நன்கு வளர உதவும் உணவாகும். இதுவும், எலும்பு மற்றும் தசைகளின் வலிமையை அதிகரிக்கும் உணவாக தான் திகழ்கிறது.

அதேபோன்று, வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் கல்சியம் எலும்புகளுக்கு பலம் சேர்க்கிறது. இதனால், குழந்தைகள் நன்கு வளர்வார்கள். மேலும், சோயாபீன்சில் போலேட், விட்டமின்ஸ், புரதச் சத்துக்கள் என்பன இருக்கின்றன. இவை குழந்தைகளின் தசை, மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் ஊக்கமளித்து நன்கு வளரவும் உதவுகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg