Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இங்கிலாந்து நிதிச் சந்தைகளில் மேலும் சரிவு : ஒன்றிய வெளியேற்றமே காரணம்

In வணிகம்
Updated: 15:30 GMT, Jun 27, 2016 | Published: 15:26 GMT, Jun 27, 2016 |
0 Comments
1184
icon_com
This post was written by :
uk economy down

தற்பொழுது இங்கிலாந்தில் சில பங்குகளின் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் நிதிச் சந்தைகளில் மேலும் சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து மக்கள், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தமது நாடு விலக வேண்டும் என்று வாக்களித்த பின்னரே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, டொலருக்கு நிகரான பவுண்ஸின் மதிப்பு கடந்த 31 வருடங்களில் காணாத அளவில் சரிவை கண்டுள்ளது. முக்கியமாக வங்கித்துறை, சொத்து மற்றும் விமானப் போக்குவரத்துறை சந்தைகள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

எனினும் சந்தைகள் குறித்து எழுந்த அச்சத்தை குறைக்கும் வகையில், இங்கிலாந்தின் பொருளாதாரம் உறுதியாக உள்ளது என்றும் புதிய பிரதமர் பதவியேற்கும் வரை அவசரகால வரவு செலவுத் திட்டம் எதுவும் இடம்பெறாது எனவும் அந்நாட்டு நிதியமைச்சர் ஜோர்ஜ் ஆஸ்பார்ன் தெரிவித்திருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதானது, இங்கிலாந்தின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பல தரப்பினரும் தொடர்ந்து தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg