Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இங்கிலாந்தின் பண மதிப்பு வீழ்ச்சி

In வணிகம்
Updated: 10:32 GMT, Jun 28, 2016 | Published: 10:31 GMT, Jun 28, 2016 |
0 Comments
1148
icon_com
This post was written by : Shailu
uk currency

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியுள்ள நிலையில், இது சர்வதேச பங்குச்சந்தைகளில் வெகுவாக எதிரொலித்தது.

இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பங்குச்சந்தைகளும் சரிவைச் சந்தித்ததாக கூறப்படுகின்றது.

அத்தோடு, அமெரிக்க டொலருக்கு எதிரான இங்கிலாந்தின் பவுண்ட் பண மதிப்பு, கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று (திங்கட்கிழமை) கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த 1985ஆம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக இங்கிலாந்து பவுண்ட்டின் மதிப்பு இன்று 1.3222 (அமெரிக்க டொலருக்கு எதிராக) டொலராக சரிந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து, பிரித்தானிய வங்கிகள், விமானப் போக்குவரத்து மற்றும் சொத்துக்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன.

மேலும் பங்குச் சந்தை வீழ்ச்சியின் காரணமாக பொருளாதார நெருக்கடிகள் வெடித்தெழும் சூழல் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg