Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பழிவாங்கும் ‘காந்தாரி’ அவன் / அவள்

In
Updated: 11:27 GMT, Jun 28, 2016 | Published: 11:26 GMT, Jun 28, 2016 |
0 Comments
1310
icon_com
This post was written by : Varothayan

ஏ.ஆர்.சி. மொபைல் கோவிசண் தயாரிப்பில் ஆகாஷின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் பாடல் ‘காந்தாரி’. இதில் கஜன், அகல்யா, சிந்துஜன், வின்சன்குரு, பார்த்தீபன், ரகுகரன், நிமலன், கரன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கின்றார்கள்.

பாடல் வரிகள் லதீப் பாலசுப்ரமணியம், இசை டி.ஜே.ரி.எஸ்.ராஜன், பாடகர்கள் செல்வரஜீவன், தமிழினி, ஒளிப்பதிவு ராஜ் மூவீஸ், படத்தொகுப்பு சசிகரன், சண்டைப்பயிற்சி பவன் மாஸ்டர், காட்சியமைப்பு மற்றும் ஒப்பனை சுஜந்தன், கஜன்.

குழுவொன்றால் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்படுவதைத் தொடர்ந்து, அந்தக் கொலைகாரர்களை பழிவாங்குவதே இப்பாடல் காட்சிப்படுத்தப்பட்ட கதை வடிவம்.

அண்மைய ஈழத்துப் படைப்புக்களில், இப்பாடலில் சண்டைக்காட்சிகள் பிரமாதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு பாராட்டுக்கள். அதேசமயம் ஒப்பனை நாயகியைப் பொறுத்தமட்டில் படு மோசமாக இருக்கிறது. அதை ஏன், கவனிக்கவில்லையோ தெரியவில்லை.

ஒளிப்பதிவும் பல இடங்களில் அதிக சூரிய ஒளியை ஊடுபுக விட்டிருக்கின்றது. மிஞ்சிய கிடைத்த காணொளிகளை வைத்து படத்தொகுப்பாளர் ஓரளவுக்கு ஒப்பேற்றியிருக்கின்றார். சண்டைக்காட்சிகளில் காட்டிய ஈடுபாட்டை, ஏனைய கதைசொல்லும் காட்சிகளில் நடிப்பில் அனைவரும் காட்டத் தவறியிருக்கிறார்கள். வெறும் செயற்கைத் தனம் தெரிகின்றது.

நல்லதொரு முயற்சி! வாழ்த்துக்கள் பாடல் குழுவினருக்கு..

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg