Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தனியார் பஸ் கட்டணத்தில் திருத்தம்

In வணிகம்
Updated: 12:23 GMT, Jun 29, 2016 | Published: 12:22 GMT, Jun 29, 2016 |
0 Comments
1156
icon_com
This post was written by : Anojkiyan
private-bus-fare-increase-Bus-Ticketing-720x480

தனியார் பஸ் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் தற்போது காணப்படும் கொள்கைகள் மற்றும் நிபந்தனைகளை தற்காலத்துக்கு பொருந்தும் வகையில் திருத்தப்பட வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தினரினால் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இந்த வேண்டுகோளினை கருத்திற் கொண்டு, முறையான போக்குவரத்து சேவையினை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் வருடாந்த பஸ் கட்டண திருத்தம் செய்வது தொடர்பில்,

2002 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் நிபந்தனைகளை சாராம்சம் செய்வதற்காக குறித்த நிருவனங்களின் உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றினை நியமிக்க போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg