Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வற் வரி விரைவில் திருத்தம்

In வணிகம்
Updated: 07:16 GMT, Jul 1, 2016 | Published: 07:16 GMT, Jul 1, 2016 |
0 Comments
1202
This post was written by :

அதிகரிப்பட்ட வற் வரியினால் மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையினால், ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய வற் வரியில் திருத்தத்தை கொண்டுவர எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டின் அரச வருமானமானது 1993 இலிருந்து 2015 வரை தொடர்ச்சியாக குறைவடைந்து வந்துள்ளது.

நாட்டின் கடன்சுமையிலிருந்து மீளும் வகையில் அன்மையில் தேசிய அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள வற் வரியினால் சாதாரண மக்கள் அன்றாடம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வற் வரியில் திருத்தத்தை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியினால் குழுவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அந்த குழு அறிக்கையினை சமர்ப்பித்த பின்னர் விரைவில் வற் வரியில் திருத்தங்கள் கொண்டுவரப்படும்’ என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg