Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இம்மாதம் இடம்பெறவுள்ள இணுவில் மற்றும் வட்டுக்கோட்டை மஹோற்சவம்

In ஆன்மீகம்
Updated: 14:01 GMT, Jul 4, 2016 | Published: 14:01 GMT, Jul 4, 2016 |
0 Comments
1232
This post was written by :

இணுவில் சைவநெறிக் கூட்டம் அருள்ஞான மிக ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் திருக்குட முழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணிவரை உள்ள சுபவேளையில் நடைபெறவுள்ளது.

திருவருட் சுனையர்களால் தமிழ் வழிபாட்டு அருட்சுனைப்படி நடத்தப்படவுள்ள இத்திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாவில் சைவ மகா சபையின் நல்கையில் சைவநெறிக் கூட்டம் தமிழ் வழிபாட்டுப் பயிற்சிக்கூடத்தில் தமிழ் அருட்சுனையாளர்களாக பயிற்சி பெற்றுவரும் 108 செந்தமிழ் அருட்சுனையாளர்கள் இக்குடமுழுக்கு வழிபாட்டுச் சடங்குகளில் உதவி அருட்சுனையாளர்களாகப் பங்கெடுத்துச் சிறப்பிப்பர்.

அதேவேளை, வட்டுக்கோட்டை கிழக்கு – துறட்டிப்பனை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம் இம்மாதம் 9ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இவ்ஆலய மஹோற்சவம் பதினொரு தினங்கள் இடம்பெறுவதுடன் எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு தேர்த்திருவிழாவும் மறுநாள் செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்குத் தீர்த்தத்திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg