Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரம்பொடை ஸ்ரீ பக்த ஆஞ்சனேய சுவாமி திருக்கோயில் எண்ணெய்காப்பு

In ஆன்மீகம்
Updated: 11:27 GMT, Jul 8, 2016 | Published: 11:26 GMT, Jul 8, 2016 |
0 Comments
1257
This post was written by : Risha

இரம்பொடை திருவருள்மிகு ஸ்ரீ பக்த ஆஞ்சனேய சுவாமி திருக்கோயில் புனராவர்தன அஷ்டபந்தன பஞ்சகுண்டஷப பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) எண்ணெய்க் காப்பு விழா இடம்பெற்று வருகிறது.

ஸ்ரீ பக்த ஆஞ்சநேய சுவாமிக்கும், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ தியானேஸ்வரர், ஸ்ரீ சீதாதேவி சமேத ஸ்ரீராமச்சந்ர மூர்த்திக்குமான எண்ணெய் காப்பு இன்று காலை 9.00 மணி முதல் இடம்பெற்று வருகிறது. அந்தவகையில் நாளை மாலை 3 மணிவரை பக்த அடியார்கள் எண்ணெய் காப்பு சாத்தலாம். இத்தெய்வீக நிகழ்வில் நாடலாவிய ரீதியில் இருந்து பெரும் திறளான பக்தர்கள் கலந்து கொண்ட வண்ணம் உள்ளனர்.

இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை காலை 9.02 மணி முதல் 10.26 மணிவரையான சுபவேளையில் கும்பாபிஷேகப் பெருவிழா இடம்பெறவுள்ளது.
பக்த பெருமக்கள் அனைவரும் இப்புண்ணிய கைங்கரியத்திற்கு ஆசார சீலராக வருகை தந்து, இக்கும்பாபிஷேக பொலிவு கண்டு எம்பெருமானைத் தரிசிப்பதோடு, கிடைத்தற்கரிய இம்மானிடப் பிறவியின் பலனைப் பரிபூரணப்படுத்தி ஸ்ரீ பக்த ஆஞ்சநேய சுவாமியின் பேரருளைப் பெற்றுய்யுமாறு அனைவருக்கும் ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

IMG_8831 IMG_8841 IMG_8845

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg