Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பத்திரிகைத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க திட்டம்

In வணிகம்
Updated: 11:45 GMT, Jul 9, 2016 | Published: 11:44 GMT, Jul 9, 2016 |
0 Comments
1179
This post was written by : Risha

பத்திரிகைகள், சஞ்சிகைகள் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்துறையில் 26 சதவீதமாக இருக்கும் அந்நிய நேரடி முதலீட்டு உச்ச வரம்பை 49 சதவீதமாக உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளை வெளியிடும் நிறுவனங்ளுக்கான அந்நிய நேரடி முதலீட்டு அனுமதி வரம்பு தற்போது 26 சதவீதமாக அரசு அனுமதித்துள்ளது. இத்துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை அதிகரிக்க வேண்டும் என பொருளாதார விவகாரங்களுக்கான துறை ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தது. இந்த முன்வரைவை கருத்தில் கொள்ள வேண்டுமென தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

சமீபத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான உச்ச வரம்பை மத்திய அரசு தளர்த்தியது. விமான போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள், மருந்து தயாரிப்பு மற்றும் உணவு பதப்படுத்தும் துறை உள்ளிட்ட எட்டு துறைகளில் அந்நிய முதலீட்டு வரம்புக்கான அனுமதி தளர்த்தப்பட்டுள்ளது. இந்த அனுமதிகள் மூலம் அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு அதிகளவில் கிடைப்பதற்கு வழி ஏற்படும் என்றும் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg