Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காய்ச்சலைப் போக்க சிறந்த மூலிகை மருத்துவம்

In
Updated: 14:42 GMT, Jul 7, 2018 | Published: 12:00 GMT, Jul 5, 2018 |
0 Comments
1210
This post was written by : Risha
சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் இருக்கும் இடத்தில் இருந்து அசைய முடியாத அளவுக்கு கஷ்டம் ஏற்படும். இன்னும் சிலரின் உடல் முழுமையாக சோர்வடைந்து நீண்ட நாட்களுக்கு துன்பப்படுவார்கள்.

எனினும் இதற்காக மூலிகை வகைகளைப் பயன்படுத்தி செய்யக்கூடிய இயற்கை மருத்துவ முறைகள் உள்ளன. பாரிஜாதம் என்றும் அழைக்கப்படும் பவள மல்லியை நாம் காய்ச்சலைக் குணப்படுத்தக் கூடிய மருந்துகளை தயாரிப்பதற்குப் பயன்படுத்தலாம்.

முதலில் நாம் பவளமல்லி இலையை பயன்படுத்தி மூளை காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் மூட்டு வலி போன்றவற்றை போக்கக் கூடிய மருந்தை தயார் செய்யலாம். இதனை தயார்செய்வதற்காக முதலில் பவள மல்லி இலை, பனங்கற்கண்டு, பவளமல்லியின் இலைகள் 4 அல்லது 5 என்பவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிறிது பனங்கற்கண்டு எடுத்து, ஒரு டம்ளர் அளவு நீர் விட்டு கொதிக்க விட வேண்டும். பின்னர் அதை நாம் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். காலை மாலை இரு வேளைகளிலும் 50 மில்லி லீட்டர் வரை அதை பருகி வரலாம். இதை பருகுவதன் மூலம் காய்ச்சலை தருகின்ற கிருமிகளை எதிர்த்து நமக்கு உடலுக்கு ஊக்கத்தை தருகிறது. அதேபோன்று, மூட்டுகளின் வலியையும் குறைக்கிறது.

பொதுவாக ஈரத்துணியில் பற்று போடுவதுண்டு. அதே போல் கோரைக்கிழங்கை தேய்த்து அதை நெற்றியில் பற்றாக போடுவதன் மூலமும் காய்ச்சலால் ஏற்படும் உடல் சூட்டை தணிக்கலாம். அதே போல் வெட்டிவேர் ஊறப்போட்ட தண்ணீரை எடுத்து காய்ச்சல் நேரத்தில் உடலை துடைப்பதன் மூலம் காய்ச்சலின் கடுமை தணியும். அதே போல் சாதாரணமாக பலசரக்கு கடைகளில் கிடைக்கக் கூடிய வினிகரையும் பற்று போட பயன்படுத்தலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)