Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வருட இறுதிக்குள் 500 கோடி டொலர் வெளிநாட்டு முதலீடு : அரசு எதிர்பார்ப்பு

In வணிகம்
Updated: 08:22 GMT, Jul 10, 2016 | Published: 08:20 GMT, Jul 10, 2016 |
0 Comments
1219
This post was written by :

இந்த வருட இறுதிக்குள், சர்வதேச நாடுகளில் இருந்து சுமார் 500 கோடி அமெரிக்க டொலர் அளவிலான முதலீடுகளை எட்டுவதற்கு அரசு எதிர்பார்த்துள்ளது. இந்த தகவலை முதலீட்டு துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, இலங்கை மூதலீட்டுச் சபை அதிகாரிகள் மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முக்கிய பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று அண்மையில் ஜப்பானுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, அந்நாட்டின் பல வணிக தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன.

இதன்போது குறிப்பாக, ஜப்பானின் முக்கிய இரண்டு வங்கிகளுடன் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின. மேலும், ஜப்பானிய பொருளாதார அமைப்புகள் பலவற்றுடன் இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பில் பேச்சு வார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு பல நாடுகளுடனும் அண்மைக்காலங்களில் இலங்கை தரப்பு, தமது நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தின. இந்நிலையில், இதுவரையில் 400 கோடி அமெரிக்க டொலர்களை இவ்வருடத்திற்குள் முதலீடாகப் பெறுவதற்கு ஏற்ற நிலைமை காணப்படுவதாகவும் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg